News March 27, 2025
IPL: இன்று SRH vs LSG மோதல்

SRH – LSG அணிகளுக்கு இடையிலான IPL போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவுள்ளது. இங்கு பேட்டிங் பிட்ச் நன்றாக உள்ளதால், SRH வீரர்கள் ரெக்கார்டு பிரேக்கிங் ஸ்கோரை அடிக்க வாய்ப்புள்ளது. LSG அணி பேட்டிங் வரிசையும் வலுவாக இருப்பதால் சிக்ஸர் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், LSG 3, SRH 1 முறை வெற்றி பெற்றுள்ளன.
Similar News
News April 1, 2025
தொடரும் ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! மீண்டும் ஒப்பந்தம்

BCCI ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் மீண்டும் இணைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என்ற காரணத்திற்காக இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ்க்கு மீண்டும் ஒப்பந்தத்தில் இணைகிறார். ₹7 கோடி சம்பளமான A+ பிரிவில் ரோகித், விராத், பும்ரா தொடர்வார்கள் என தெரிகிறது.
News April 1, 2025
அமித்ஷா சொன்னது காமெடி: திருமாவளவன்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என அமித்ஷா கூறியது நகைச்சுவை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணியால் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது என்பது அமித்ஷாவிற்கே தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் காலம் இன்னும் கனியவில்லை எனவும் திராவிடக் கட்சிகள் பலவீனமடையும்போது அதற்கான கோரிக்கை வலுக்கும் என்றும் திருமா தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
எம்புரான் படத்துக்கு தடைகோரி கேரளா ஐகோர்ட்டில் வழக்கு

மோகன்லாலின் எம்புரான் படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில், 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. நடிகர் மோகன்லால் வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எம்புரான் படத்தை வெளியிட தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி வழக்குத் தொடர்ந்துள்ளார். உங்கள் கருத்து என்ன?