News March 27, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் நள்ளிரவில் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த கடற்படையினர், ஒரு படகு மற்றும் வலைகள், மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 6, 2025
விராட், ரோஹித்தை முந்திய 14 வயது கிரிக்கெட்டர்!

இந்திய கிரிக்கெட்டில் தற்போது பிரபலமான வீரர்கள் என்றால் கோலியும், ரோஹித்தும்தான். அதுவும் இவர்கள் ஓய்வுபெறுவார்கள் என பேசப்பட்டதால் அடிக்கடி ஹெட்லைன்சில் இடம்பெறுகின்றனர். ஆனாலும், கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் இவர்கள் இடம்பெறவில்லை. மாறாக IPL-ல் அசத்திய 14 வயது கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர்தான் Most-Searched Personalities in 2025 லிஸ்டில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
News December 6, 2025
சற்றுமுன்: விலை ₹3000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் வெள்ளி ₹4000 குறைந்தது. ஆனால், இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹3 உயர்ந்து ₹199-க்கும், கிலோ வெள்ளி ₹3000 உயர்ந்து ₹1,99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை உயர்ந்து கொண்டே வருவதால், வரும் நாள்களில் நம்மூரிலும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
News December 6, 2025
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் புது அப்டேட்!

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் ’சிக்மா’ படத்தில் நடிகை கேத்ரின் தெரசா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு இவர் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு, தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.


