News March 27, 2025
ரூ.75 லட்சம் கிரிப்டோ கரன்சி மோசடி செய்த மூவர் கைது

திசையன்விளையை சேர்ந்த அந்தோணி செல்வம் (40) ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ரியாஸ் (36), அய்யாதுரை (37), இசக்கி முத்து (28) ஆகியோர் ரூ.75 லட்சம் கொடுத்து 82,691 எண்ணிக்கையிலான அமெரிக்க டெதர் டாலர் கிரிப்டோ கரன்சியை ஆன்மூலம் பெற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த ரூ.75 லட்சம் கலர் ஜெராக்ஸ் என தெரியவந்த நிலையில் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 19, 2025
நெல்லை பள்ளி மாணவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை

தபால் தலை சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக தீன் தயாள் ஸ்பார்ஸ் யோஜனா என்ற உதவித்தொகை திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 6000 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் செப்.1ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என நெல்லை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
நெல்லையில் இன்றைய நிகழ்ச்சிகள்

நெல்லை மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நெல்லை சந்திப்பு ராஜ் மஹாலில் வைத்து காலை 10 மணிக்கு புகைப்பட கண்காட்சியினை மேயர் ராமகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.
நெல்லை சந்திப்பு ஆர் கே வி மஹாலில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் முகாமினை எம் எல் ஏ அப்துல் வஹாப் 10 மணிக்கு துவக்கி வைக்கிறார்.
News August 19, 2025
நெல்லையில் தங்க நகை பயிற்சி பட்டறை

தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் ஆகஸ்ட் 23, 24, 27, 31 அன்று நெல்லை ஸ்ரீபுரத்தில் ரோஹிணி கோல்ட் அகாடமியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் பயிற்சியில் தங்கத்தின் தரம், ஹால்மார்க், கல், விலை நிர்ணயம், போலி நகைகள் அடையாளம் காணுதல் கற்றுத்தரப்படும். 18 வயது மேல் ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். (விவரங்களுக்கு www.rohinigoldacademy.com) *SHARE IT