News April 2, 2024
வெயில் கூடுதலாக இருக்கும்

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில், பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தைவிட வெயில் கடுமையாக இருக்கும். வழக்கமாக 4 முதல் 8 நாள்கள் வரை நீடிக்கும் வெப்ப அலையின் தாக்கம், நடப்பாண்டில் 10 முதல் 20 நாள்கள் வரை நீடிக்கும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
NDA கூட்டணியில் இணையும் அமைப்புகள்!

NDA கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி NDA கூட்டணிக்கு வலுசேர்த்திட பாஜக சார்பில் மாநில குழு அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் வரும் சட்டமன்ற தேர்தலை சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெறுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 6, 2026
சித்தி என்ற சொல் எப்படி வந்தது ?

இ என்பது பெண்பால் விகுதி. அழகு + இ = அழகி, கண் + இ = கண்ணி. ஆண்பால், பெண்பால் விகுதிகளைக் கொண்டு பண்புப் பெயர்ச்சொல்லை முன்னொட்டாய்ச் சேர்த்து, அப்பண்புக்குரிய உயர்திணைப் பெயரை உருவாக்கலாம். எ.கா. சிறுமை + அப்பா = சிற்றப்பா. அதன்படி, இங்கே சிறுமை என்பது இளமை சார்ந்த பொருளில் வருவது. சிறுமை + அன்னை = சிற்றன்னை, சிறுமை + இ = சிற்றி. சிற்றி என்ற தூய தமிழ்ச்சொல்லே பேச்சு வழக்கில் ‘சித்தி’ ஆயிற்று!
News February 6, 2026
‘ஜன நாயகன்’ படம்.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் படியான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘சினி வேர்ல்ட்’ என்ற வெளிநாட்டு டிக்கெட் விநியோக நிறுவனம், ‘ஜன நாயகன்’ பிப்., 20-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. ஆனால், தயாரிப்பு தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அதேசமயம் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் படத்தை சென்சாருக்கு சமர்ப்பிக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாம்.


