News April 2, 2024
BREAKING: T.R.பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறார்?

திமுகவின் மூத்த தலைவர் T.R.பாலுவின் மகள் T.R.B.மனோன்மணி பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் T.R.பாலுவின் முதல் தாரத்து மகள். அமைச்சர் T.R.B ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிருந்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, திருச்சி சிவா மகன் திருச்சி சூர்யா பாஜகவில் இருக்கும் நிலையில், T.R.B.மனோன்மணியும் பாஜகவில் இணைவது திமுகவுக்கு நெருக்கடியாக மாறும்.
Similar News
News January 31, 2026
TET முடிவுகள் வெளியானது.. உடனே செக் பண்ணுங்க

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) முடிவுகள் இணையளத்தில் வெளியாகியுள்ளது. 4,25,000 பேர் எழுதிய தேர்வு முடிவுகளை, <
News January 31, 2026
மோடிக்கு எதிராக விஜய் வீடியோ: K.C.பழனிசாமி

தவெகவினருக்கு இன்னும் அரசியல் பக்குவம் வரவில்லை என K.C.பழனிசாமி கூறியுள்ளார். CBI வைத்து தவெகவுக்கு டெல்லி அழுத்துகிறதா என கேட்டதற்கு பதிலளித்த அவர், திமுகவுக்கு எதிராக ‘CM சார்..’ என பேசிய விஜய், மோடிக்கு அப்படியொரு வீடியோ வெளியிட்டிருந்தால் இந்திய அளவில் பிரபலமாகியிருப்பார். மேலும், அனைவரையும் எதிர்த்து நிற்க தயாராக இருக்க வேண்டும், பயப்பட்டால் அரசியலுக்கே வரக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.
News January 31, 2026
MGR, ஜெயலலிதா தான் ரோல் மாடல்: விஜய்

33 ஆண்டுகால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவல்ல என <<19008367>>NDTV பேட்டியில்<<>> விஜய் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவேன் எனவும், ஒருபோதும் கிங்மேக்கராக இருக்கப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அரசியலில் ரோல்மாடலாக MGR, ஜெயலலிதாவை பார்ப்பதாக கூறியுள்ள விஜய், ECI விசில் சின்னம் ஒதுக்கியதை தனது முதல் வெற்றியாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


