News March 27, 2025
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொடுத்த வாக்குறுதியை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீதி நியாயத்துக்குக் கட்டுப்படும் நீங்கள் தன்மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விசுவாசமான நீங்கள் நம்பிக்கை துரோகிகளை மன்னிக்கவே மாட்டீர்கள் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News April 1, 2025
ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ரெடி

ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஸ்பைடர் மேன்-4ன் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. Spider-Man: Brand New Day என பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2026 ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. ஸ்பைடர் மேன் – 4க்கு ரெடியா?
News April 1, 2025
நிதியாண்டின் முதல் நாளே பங்குச் சந்தைகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ் 902 புள்ளிகள் சரிந்து 76,512 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், நிஃப்டி 205 புள்ளிகள் குறைந்து 23,313 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் நாளை(ஏப்.2) முதல் அமலுக்கு வருவது உள்ளிட்டவையே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
News April 1, 2025
ஜடேஜாவின் வைரல் போஸ்ட்.. மீளுமா CSK

நடப்பு சீசனை CSK வெற்றியுடன் தொடங்கினாலும் அடுத்த 2 போட்டிகளிலும் தொடர் தோல்வி. முக்கியமாக தோனி 9வது வீரராக களமிறங்கியது பெரும் பேசுபொருளாக மாறியது. இதனிடையே தோனியுடன் களத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் எல்லாம் மாறும் என ஜடேஜா பதிவிட்டுள்ளார். அணியின் முக்கிய தூண்களான தோனி, ஜடேஜா சோபிக்கத் தவறியதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.