News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News April 1, 2025
அண்ணாமலைக்கு சேகர்பாபு சவால் .. ஆய்வுக்கு ரெடியா?

டெல்லியில் விழுந்த அடியை மறைக்க தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம் சுமத்துவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். குறைகளைக் கூட, குற்றச்சாட்டுகளாக கூறுபவர்களுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆதிதிராவிடர் விடுதிகளில் வழங்கும் உணவு தரமாக இல்லை எனக் கூறும் அண்ணாமலையை எங்களுடன் ஆய்வு செய்ய வரச்சொல்லுங்கள் என்று சவால் விடுத்தார்.
News April 1, 2025
ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ரெடி

ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஸ்பைடர் மேன்-4ன் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. Spider-Man: Brand New Day என பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2026 ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. ஸ்பைடர் மேன் – 4க்கு ரெடியா?
News April 1, 2025
நிதியாண்டின் முதல் நாளே பங்குச் சந்தைகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ் 902 புள்ளிகள் சரிந்து 76,512 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், நிஃப்டி 205 புள்ளிகள் குறைந்து 23,313 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் நாளை(ஏப்.2) முதல் அமலுக்கு வருவது உள்ளிட்டவையே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.