News March 27, 2025
இனிமேல் இது கிரிக்கெட் கிடையாது: ரபாடா வேதனை

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எளிதாக 200 ரன்களை கடந்து விடுகிறது. இதனால், பவுலர்களுக்கான முக்கியத்துவம் குறைகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், குஜராத் அணியில் விளையாடும் ரபாடா, ‘இந்த போட்டியை இனிமேல் கிரிக்கெட் என்று கூறாதீர்கள், பேட்டிங் என்று கூறுங்கள்’ என ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மைதானமும் பிளாட் பிட்ச்சாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 1, 2025
மேலும் 2 தமிழக பொருட்களுக்கு புவிசார் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரம் கிடைத்துள்ளது. புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் (அ) நகரம் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அடையாளம் ஆகும். தேசிய அளவில் 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு முதலிடத்திலும் கர்நாடகா, உத்தரப்பிரதேசம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
News April 1, 2025
மதியம் 1 மணியில் இருந்து digital services இயங்காது

இன்று (ஏப்.1ஆம் தேதி) நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் நிதியாண்டிற்கான வருடாந்திர வங்கிக் கணக்கு மூடல் இருக்கும். இதன்காரணமாக இன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை digital services செயல்படாது. எனவே, வாடிக்கையாளர்கள் தடையற்ற சேவைகளைப் பெற UPI Lite மற்றும் ATM-களைப் பயன்படுத்த வேண்டும் என்று SBI வங்கி அறிவித்துள்ளது.
News April 1, 2025
‘காவிரி – வைகை – குண்டாறு’ எங்கள் பிள்ளை: துரைமுருகன்

காவிரி – வைகை – குண்டாறு திட்டம் நாங்கள் பெற்ற பிள்ளை அதனை ஒருபோதும் கைவிட மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேரவையில், MLA சி.விஜயபாஸ்கர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய அவர், இத்திட்டத்திற்காக இதுவரை ₹288 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறினார். 2008இல் கருணாநிதி முன்மொழிந்த இத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிப்போம் என்றும் உறுதி அளித்துள்ளார்.