News March 27, 2025
சீனாவின் ராஜதந்திரம்.. டிரம்பால் வந்த வினை

டிரம்ப் நிர்வாகத்தால் சமீபத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களை சீன உளவு அமைப்புகள் டார்கெட் செய்வது தெரிய வந்துள்ளது. நிதி நெருக்கடியில் இருக்கும் அவர்களை போலியான நிறுவனங்கள் மூலம் பணியில் அமர்த்தி, அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை பெற முயற்சிப்பதாக USA புலனாய்வு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் குறித்து தங்களுக்கு தெரியாது என சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
Similar News
News April 1, 2025
‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமை இத்தனை கோடியா?

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ பட ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்தாண்டு ஜன. 9-ல் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
News April 1, 2025
22 வயது பெண் ஆணவக் கொலையா?

பல்லடம் அருகே 22 வயது பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வெண்மணி – வித்யா 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த வித்யாவின் உடலை, போலீசுக்கு தெரிவிக்காமல் பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து, காதலியின் சாவில் மர்மம் இருப்பதாக காதலன் அளித்த புகாரில், அப்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.
News April 1, 2025
ஜியோ ஹாட்ஸ்டார் இலவச ரீசார்ஜ்.. அவகாசம் நீட்டிப்பு

ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படுகிறது. இதை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மூலம் ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரூ.299 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஹாட்ஸ்டார் ஓடிடியை 90 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என ஜியோ அறிவித்திருந்தது. தற்போது இந்த ரீசார்ஜ் அவகாசத்தை ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஜியோ நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.