News March 27, 2025
முதல் வெற்றியை முத்தமிட்ட கொல்கத்தா அணி!

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை கொல்கத்தா பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி வீரர்கள் யாரும் பெரியளவில் ரன் அடிக்கவில்லை. எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நிதானமாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 97* ரன்கள் விளாச, அந்த அணி எளிதில் வென்றது.
Similar News
News August 24, 2025
TN-ல் எங்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை

TN-ல் எந்த இடத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ONGC-க்கு SEIAA அனுமதி வழங்கிய நிலையில், அதனை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், TN-ல் இனி எப்போதும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
News August 24, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.
News August 24, 2025
CM ஸ்டாலினுடன் சுதர்சன் ரெட்டி சந்திப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னையில் CM ஸ்டாலினை சந்தித்தார். அப்போது திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார். நிகழ்வில் பேசிய சுதர்சன் ரெட்டி, பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் CM ஸ்டாலின் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்துவதாகவும் கல்வி, சுகாதார கட்டமைப்பில் நாட்டை வழிநடத்தும் அளவிற்கு தமிழகம் உயர்ந்திருப்பதாகவும் புகழ்ந்தார்.