News March 26, 2025

குரூப்-1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்ட சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04172 291400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆக.25) இரவு 11 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 25, 2025

இராணிபேட்டை மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

image

இராணிப்பேட்டை மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News August 25, 2025

அரக்கோணத்தில் அதிமுகவினர் கைது

image

அரக்கோணத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை கண்டித்து இன்று (ஆக.25) தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் 150க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!