News March 26, 2025

உங்கள் மனைவியிடம் இந்த 7 அறிகுறிகள் உள்ளதா?

image

உங்கள் மனைவி, உங்கள் மீது கோபத்தில் இருப்பதை பின்வரும் அறிகுறிகள் உணர்த்தும்: 1)வழக்கத்துக்கு மாறான அமைதி 2)அடிக்கடி உங்களை விமர்சிப்பது 3)அடிக்கடி எரிச்சல் / கோபம் 4)தலைவலி, தசைப்பிடிப்பு அறிகுறிகள் 5)வழக்கமாக செய்துகொண்டிருந்த விஷயங்களிலிருந்து விலகுவது 6)தாம்பத்ய உறவை தவிர்ப்பது 7)கடமைக்காக பேசுவது, இடித்துப் பேசுவது என பேச்சில் அதிருப்தி. உடனே காரணத்தை கண்டறிந்து சரிசெய்தால் மகிழ்ச்சி தானே!

Similar News

News January 18, 2026

தேனி: கணவனை கத்தியால் வெட்டிய மனைவி…!

image

தேவதானப்பட்டியை சேர்ந்த தம்பதியினர் சின்னமுருகன்-முத்துப்பேச்சி. தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்தனர். இதில் போதிய வருமானம் இல்லாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் காய்கறி விற்ற பணம் குறைவாக இருந்ததாக முத்துப்பேச்சி, சின்னமுருகனை அவதூறாக பேசி கத்தியால் வெட்டியுள்ளார். காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். கணவன் அளித்த புகாரில் மனைவியை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

News January 18, 2026

அல்கொய்தாவின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

image

கடந்த டிசம்பரில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, சிரியாவில் உள்ள <<18825125>>ISIS<<>> அமைப்பின் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கர்கள் மீதான ISIS தாக்குதலுடன் தொடர்புடைய அல்கொய்தா கிளை அமைப்பின் தலைவரை, அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றுள்ளது. கொல்லப்பட்ட பிலால் ஹசன் அல் ஜாசிம், ISIS-ன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

News January 18, 2026

தமிழகத்தில் GI டேக் அங்கீகாரம் பெற்ற பொருள்கள்

image

காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி என்று ஊர் பெயருடன் சேர்த்து சொல்ல காரணம், மற்ற இடங்களை விட இந்த ஊர்களில் அவை தனித்துவமான தரம் & சிறப்புடன் உருவாகின்றன. இந்த பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரத்தை வழங்குகிறது. தமிழகத்தில் 69 பொருள்கள் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த லிஸ்ட்டில் பலரும் அறியாத சிலவற்றை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை இடது புறமாக Swipe செய்து அறிந்து கொள்ளவும்.

error: Content is protected !!