News March 26, 2025

நெட்ஃபிளிக்ஸில் சாதனை படைத்த ‘Adolescence’

image

பிரிட்டிஷ் கிரைம் டிராமாவான ‘Adolescence’, இதுவரை எந்த ஒரு லிமிடெட் வெப்சீரிஸும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. நெட்ஃபிளிக்ஸில் வெளியான 11 நாள்களில், உலகளவில் 6.63 கோடி பார்வையாளர்களை அந்த வெப்சீரிஸ் பெற்றுள்ளது. வெறும் 4 எபிசோட்களே கொண்ட அந்த இணையத் தொடரானது, 13 வயது சிறுவன் செய்த கொலையை கதைக்களமாக கொண்டு சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி இத்தொடர் வெளியானது.

Similar News

News April 1, 2025

IPL: KKR-ன் மோசமான சாதனை

image

IPL-ல் கொல்கத்தா அணி மோசமான சாதனையைப் படைத்துள்ளது. மும்பை அணியுடனான நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம், ஒரே அணியுடன், ஒரே மைதானத்தில் பல முறை தோற்ற அணியாக KKR மாறியுள்ளது. வான்கடே மைதானத்தில் மும்பை அணியிடம் இதுவரை 10 முறை தோற்றுள்ளது. மொத்தமாக மும்பையிடம் KKR இதுவரை 24 முறை தோற்றுள்ளது. முன்னதாக இந்த சாதனையை பஞ்சாப் படைத்திருந்தது. கொல்கத்தாவில் KKR-யிடம் பஞ்சாப் அணி 9 முறை தோற்று இருந்தது.

News April 1, 2025

சிதம்பரம் தொகுதி Ex எம்.பி அ.முருகேசன் காலமானார்

image

சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி முருகேசன் (87) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1977ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1980 வரை பதவியிலிருந்தார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்த பிறகு அவருடன் அதிமுகவுக்கு சென்ற இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தாய்க் கழகமான திமுகவில் இணைந்தார். கடந்த 2024 தேர்தலில் திருமாவளவன் வெற்றிக்காகப் பெரிதும் பாடுபட்டார்.

News April 1, 2025

மீண்டும் இணையும் ‘சிறுத்தை’ காம்போ

image

நடிகர் கார்த்தி அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எமோஷனல் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ‘கைதி 2’ உள்ளிட்ட தனது அடுத்தடுத்த கமிட்மென்ட்களை முடித்துவிட்டே கார்த்தி இப்படத்தில் இணைய உள்ளாராம்.

error: Content is protected !!