News March 26, 2025
கோடை கால நீச்சல் பயிற்சி – விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 01.04.2025 முதல் 08.06.2025 வரை ஐந்து கட்டங்களாக நடைபெறும். 12 நாட்கள் பயிற்சி பெற 4 அடி உயரம் கொண்ட சிறுவர்கள் தகுதி பெறுவர். பயிற்சி கட்டணம் ரூ.1,500 + 18% GST. காலை மற்றும் மாலை நேரங்களில் பயிற்சி நடைபெறும். விபரங்களுக்கு 04575299293 அல்லது 7401703503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 3, 2025
மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி துவக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் வரும் 06.04.2025 அன்று காலை 09 மணியளவில் சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 3, 2025
சிவகங்கை மக்களே தயாராக இருங்க சென்னைக்கு புதிய ரயில்

சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இரண்டு தினசரி ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் மூன்றாவதாக சென்னைக்கு ஒரு புதிய இரவு இரயில் சேவை அறிமுகமாகிறது. பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வண்டி எண்: 16103/16104 தாம்பரம்-இராமேஸ்வரம் சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.இந்த ரயில் சிவகங்கை வழி செல்லும். மக்களே உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.
News April 3, 2025
சிவகங்கை: வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9-ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் விருதுநகர்,சிவகங்கை அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் டிகிரி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் அழைக்கலாம். SHARE செய்து உதவவும்