News March 26, 2025
இயற்கை அழகு நிறைந்த மேலகிரி மலைகள்

மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
News April 1, 2025
ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
News April 1, 2025
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்து

மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (40) டைல்ஸ் தொழிலாளி, இவர் போச்சம்பள்ளியில் இருந்து கூச்சனூர் செல்லும் சாலையில், திருவாய் மாரியம்மன் கோவில் எதிரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரில் வந்த இருசக்கர வாகனம் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டதில் வினோத் குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலிஸ்சார் உடைலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தது வருகின்றனர்.