News March 26, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Similar News

News February 11, 2026

விஷத்தால் பரிதாபம்.. பொன்னம்பலம் விளக்கம்

image

பொன்னம்பலம் அண்மையில் வீல் சேரில் இருந்தபடி டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது. சொந்த அண்ணனே தனக்கு <<19079575>>விஷம் கொடுத்ததாக<<>> அவர் வேதனையில் கூறியிருந்தார். இந்நிலையில், அதிகளவு மது அருந்தியதாலேயே இப்படி அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் செய்தி பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த பொன்னம்பலம், சிலர் ஆதாரமின்றி குற்றஞ்சாட்டுவதாகவும், அவர்கள் பேசும் கதைகளை கேட்பதற்கு தனக்கு நேரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News February 11, 2026

கேஸ் கனெக்சனுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

image

கேஸ் கனெக்சனுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் மட்டுமே மானியம் கிடைக்கும். இதனை செய்ய, முதலில் LPG (HP, Indane, Bharat Gas) வழங்குநரின் இணையதளத்துக்கு செல்லவும் *‘LPG services’-ல் ‘Join DBTL using Aadhaar’ அல்லது ‘Download Forms’-ஐ தேர்ந்தெடுக்கவும் *படிவம் 1 & படிவம் 2 என இரண்டையும் டவுன்லோடு செய்து தேவையான ஆவணங்களுடன் படிவம் 1-ஐ வங்கியிலும், படிவம் 2-ஐ LPG விநியோகஸ்தர் அலுவலகத்திலும் சமர்ப்பிக்கவும்.

News February 11, 2026

BREAKING: தவெகவில் புதிதாக 4 மாவட்டங்கள்!

image

தவெகவில் மேலும் 4 மாவட்டங்களை உருவாக்கி அதற்கான நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கெனவே அமைப்பு ரீதியாக 128 மாவட்டங்களாக உள்ள நிலையில் தற்போது 132 மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்த விவரங்களை அறிய <>இந்த லிங்கை கிளிக்<<>> பண்ணுங்க.

error: Content is protected !!