News March 26, 2025
குறுகிய கால இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி!

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் Watch and Clock Repair 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது https://forms.gle/8Zf9r5Ne61x7CERW9 என்ற Google Form மூலமாகவோ ஏப்.18- க்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
சேலம் மக்களே இனி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News September 14, 2025
சேலம் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன் தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, அவர் 20 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

ரயில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் காரணமாக போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66612), மேட்டுப்பாளையம்- போத்தனூர் மெமு ரயில் (66615) ஆகிய ரயில் சேவைகள் இன்று (செப்.14) முழுவதும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.