News March 26, 2025
விஜயின் மாஸ்டர் பிளான்.. தனித்து இறங்கும் தவெக?

2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனித்து களமிறங்கி தனது அரசியல் பலத்தை நிரூபிக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இதனால் திமுக, அதிமுக- பாஜக (உறுதியாகவில்லை), தவெக, நாதக என தமிழக அரசியல் களத்தில் பல முனை போட்டி உருவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 சட்டமன்ற தேர்தல் சந்திக்க இருக்கிறது.
Similar News
News November 11, 2025
50 தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுக்கும் பாஜகவா?

2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் மக்களவை தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 3 மடங்கு அதிகரித்தது. இதனால், அதிமுகவிடம் 50 தொகுதிகளை கேட்டு பாஜக அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக சில டேட்டாக்களை கொடுத்து, அதிகபட்சமாக 25 தொகுதிகள் கொடுக்கலாம் எனவும் சொல்லியுள்ளதாம். ஆனால், அதிமுக என்னதான் சொன்னாலும் 50 தொகுதிகள் லட்சியம்.. 40 தொகுதிகள் நிச்சயம் என பாஜக விடப்பிடியாக இருக்கிறதாம்.
News November 11, 2025
இரவில் கைது செய்தனர்.. விடிய விடிய விசாரணை

நாட்டை உலுக்கிய <<18254468>>டெல்லி கார் குண்டு வெடிப்பு<<>> வழக்கில் சம்பந்தப்பட்ட காரின் முதல் உரிமையாளர் சல்மானை இரவில் கைது செய்த போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானாவை சேர்ந்த அவர் சில வருடங்களுக்கு முன்பே காரை மற்றொருவருக்கு விற்றுள்ளார். தற்போது அந்த காரை புல்வாமா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பயன்படுத்தி வந்ததால், தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
News November 11, 2025
இளமையின் ரகசியத்தை பகிர்ந்த மஞ்சு வாரியர்

47 வயதாகும் மஞ்சு வாரியர், இப்போதும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், தனது உடலமைப்பை பேணி வருகிறார். தன்னுடைய இளமையின் ரகசியத்தை அவர் பகிர்ந்துள்ளார். நாள் தவறாமல் ஜிம்முக்கு செல்வதும், நடனம் ஆடுவதும் தான் உடல் ரீதியாக நான் செய்யக்கூடிய பயிற்சிகள். இது தவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறேன். இவற்றை தவறாமல் பின்பற்றுவதால் தான் வெயிட் போடாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


