News March 26, 2025

தூத்துக்குடி -கோவளம் தெரியுமா உங்களுக்கு?

image

மகாபலிபுரம் கோவளம் கடற்கரையை தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தூத்துக்குடி, முள்ளக்காட்டில் உள்ள கோவளம் கடற்கரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிக அழகிய அமைதியான கடல். கடலின் குளிர்ந்த காற்று தாலாட்டும். இதனால் தான் இந்த கடற்கரையை சுற்றுலா தளமாக மாற்றவும் கடல் நீர் சருக்கு விளையாட்டுக்கான இடமாகவும் அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஒருமுறை வந்து பாருங்கள் மறக்க மாட்டீர்கள். *நண்பர்களுக்கும் பகிரவும்*

Similar News

News April 14, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News April 13, 2025

புத்தாண்டில் இங்கு வழிபாட்டால் பிரச்சனைகள் வராது !

image

தமிழ் புத்தாண்டு அன்று இந்துக்கள் முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் புத்தாண்டு அன்று வழிபாடு செய்ய சிறந்த கோயில் ஆறுமுக மங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோயில் என்று ஆன்மீகச் சான்றோர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் விநாயகர் கோயில் என்ற பெருமையை பெற்ற இக்கோயிலில் வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சனை, வழக்கு பிரச்சனைகள் இருக்காது என்பது ஐதீகம்.

News April 13, 2025

மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு 

image

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் ஷீலா ஸ்டீபன் தெரிவித்துள்ளார். கோடைகால பயிற்சியில் விளையாட்டுக்களான தடகளம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து போன்ற பயிற்சிகள் வருகிற மே 1 முதல் 16 தேதி வரை நடைபெற உள்ளது. காலை, மாலை என இரு வேளை நடைபெற உள்ளது. தொடர்புக்கு 95787 83632 அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்*

error: Content is protected !!