News March 26, 2025
புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடு – அமைச்சர் அறிவிப்பு

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் இந்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விளக்குகளும் LED விளக்குகளாக மாற்றப்படும். மின்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.
Similar News
News August 11, 2025
வைரமுத்துவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கன்டன ஆர்ப்பாட்டம் இந்திரா காந்தி சிலை அருகே இன்று நடைபெற்றது. இதில், கடவுள் ராமரை இழிவுபடுத்தி வைரமுத்து பேசியதாக கூறி நடைபெற்ற ஆர்பாட்டத்தில், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில், ஏராளமான பாஜகவின் கலந்து கொண்டு வைரமுத்துவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வைரமுத்துவின் உருவப்படத்தை கிழித்து எறிந்தனர்.
News August 11, 2025
புதுச்சேரியில் மக்கள் செல்ல வேண்டிய முக்கிய இடங்கள்!

▶அரிக்கமேடு: இங்கு ரோமனிய வரலாறு தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
▶பொட்டானிகல் கார்டன்: உலகின் பல்வேறு வகையான செடிகள் உள்ளன.
▶மணக்குள விநாயகர் கோயில்: இக்கோயிலில் 40 விதமான விநாயரின் உருவங்கள் உள்ளன.
▶பாரதி மியூசியம்: பாரதி வாழ்ந்த இல்லம் தற்போது மியூசியமாக உள்ளது.
▶பிரான்ஸ் போர் நினைவிடம்: முதல் உலக போரில் பிரான்சிற்காக உயிரிழந்தவர்களின் நினைவிடம் கௌபர்ட் அவென்யூவில் உள்ளது.
News August 11, 2025
புதுச்சேரி மக்களே… இனி ரேஷன் அட்டை பெறுவது எளிது!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மக்களுக்கு குட் நியூஸ். இனி ரேஷன் அட்டை சேவைகளை வருகிற ஆக.18ம் தேதி முதல் பொதுசேவை மையங்கள் மூலம் பெற முடியும். இதனை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர்ப் சத்யமூர்த்தி செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளார். இனி சுலபமாக குடும்ப அட்டைகளை பெறலாம்..! இதை அனைவர்க்கும் SHARE பண்ணுங்க..!