News March 26, 2025
நாகையில் மார்ச் 29ஆம் தேதி கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாகையில் உள்ள 193 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம், வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நீரின் தூய்மையை பாதுகாத்தல், நீர் மாசுபாட்டை தடுத்தல், அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திடல், போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
நாகை: விவசாயிகள் கணக்கில் ரூ.285 கோடி வரவு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், கடந்த 03.09.2025 முதல் 09.11.2025 வரை 26,213 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 285 கோடியே, 41 இலட்சத்து, 30 ஆயிரத்து 392 தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது எனவும், தொடர்ந்து கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
நாகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

நாகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News November 11, 2025
நாகை மக்களே, முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர்,<


