News March 26, 2025
அரசுப் பள்ளியில் இலவச மடிக்கணினிகள் திருட்டு

செங்கல்பட்டு நகராட்சியில், அறிஞர் அண்ணா அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடு போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்களில் சிலர் இந்த மடிக்கணினிகளை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (ஜனவரி-09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 9, 2026
செங்கல்பட்டில் பிறந்த பிரபலங்களாக இவர்கள்…

✅ வஹீதா ரஹ்மான் – இந்தியாவின் புகழ் பெற்ற நடிகை
✅ நாசர் – புகழ் பெற்ற தமிழ் நடிகர்
✅ C.V ஸ்ரீதர் – புகழ்பெற்ற இயக்குனர்
✅ சுல்தான் பக்ஷ் – முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்த புரட்சியாளர்
✅ ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி – ராணுவத் தளபதி (1986 – 1988)
✅ ஒவி அழககேசன் – செங்கல்பட்டின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்
உங்களுக்கு தெரிந்த பிரபலங்களை ஷேர் பண்ணுங்க!
News January 9, 2026
இ.சி.ஆர்., சாலையில் போக்குவரத்து தடை

சென்னை – பாண்டிச்சேரி ஈ.சி.ஆர்., சாலையில் வரும் 11-ந்தேதி “அயர்ன் மேன் 5150 டிரையத்லான் – சென்னை இம்பேக்ட்” எனும் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனால் வரும் ஜன.10-ந்தேதி இரவு முதல் மறுநாள் மதியம் வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவளம் முதல் சூளேரிக்காடு வரை போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் பயன திட்டத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


