News March 26, 2025
பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அழைப்பு

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீஸார் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (14.01.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம், பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துறை காவல் தெய்விகப்பட்டுள்ளது.
News January 13, 2026
சிவகங்கை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு APPLY

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News January 13, 2026
புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்றில் மாசு ஏற்பட்டு நச்சுத் தன்மையை உண்டாக்கும். எனவே புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.


