News March 26, 2025

மதுரையில் செருப்பே அணியாத விசித்திர கிராமம்

image

மதுரை அருகே உள்ள அந்தமான் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்குள் செருப்பு அணிவது இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதற்கு காரணம் கருப்பசாமி மீது உள்ள பக்திதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊர் எல்லைக்குள் வரும்போதும் செருப்பை கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனை மீறினால் சாமி பலி வாங்கிவிடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. *புது தகவல்னா பகிரவும்*

Similar News

News October 20, 2025

மதுரையில் சிறுமி கர்ப்பம்-சிறுவன் கைது

image

மதுரை கள்ளிக்குடி அரசபட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமி கர்பமடைந்துள்ளார். தகவல் அறிந்த ஊர் நல அலுவலர் ஆவுடையம்மாள் புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் 17 வயது சிறுவனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News October 20, 2025

மதுரை: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

image

மதுரை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 20, 2025

தோப்பூரில் தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு

image

மதுரை திருமங்கலம் அருகே தோப்பூரைச் சேர்ந்த சோனை முத்து 47 நேற்று முன்தினம் இவரது வீட்டில் அனைவரும் தூங்கினர். காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய மகள் ஆஷிகா 19 அணிந்திருந்த 2.5 பவுன் நகை வீட்டில் இருந்த அலைபேசியை மர்ம நபர் திருடி தப்ப முடியன்றார், சத்தம் கேட்டு எழுந்து வீட்டினர் மர்ம நபரை விரட்டிய போது அவர் தப்பினார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!