News March 26, 2025
கடைசி வரை நிறைவேறாத மனோஜின் ஆசை!

48 வயதில் மாரடைப்பால் மறைந்த நடிகர் மனோஜின் ஒரு ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய்விட்டது. தந்தை பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1978-ல் வெளியான சிவப்பு ரோஜாக்கள் படத்தின் 2ம் பாகத்தை இயக்க மனோஜ் விரும்பினார். சிம்பு, ஷ்ருதிஹாசனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படமாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதற்கு முன்பே மனோஜ் மறைந்துவிட்டார்.
Similar News
News November 6, 2025
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி போராட்டம்

சமூகத்தை சீரழிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளதாக கூறி, அதனை தடை செய்ய வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் பலமுறை வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி, வரும் 9-ம் தேதி தனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 6, 2025
CM பதவியை குறிவைக்கும் லாட்டரி சார்லஸ் மகன்

லாட்டரி மார்ட்டின் மகனும் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனருமான சார்லஸ், புதுவையில் JCM மக்கள் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். CM பதவியை குறிவைத்து காய்நகர்த்தி வரும் அவருக்கு, 15 MLA-க்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் தனிக்கட்சியும் தொடங்கவுள்ளாராம். சார்லஸுக்கு பக்க பலமாக பாஜக இருப்பதாக கூறப்படும் நிலையில், NDA கூட்டணியில் தொடர வேண்டுமா என CM ரங்கசாமி யோசனையில் இருக்கிறாராம்.
News November 6, 2025
லாபம் தரும் 10 தொழில்

தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லையா? எப்போதும் லாபம் தரக்கூடிய சில கிராமப்புற தொழில்கள் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க செய்ய விரும்பும் தொழில் எது? கமெண்ட்ல சொல்லுங்க.


