News March 26, 2025
கோவை மாநகராட்சியில் நீர் தேவைக்காக புதிய திட்டம்

தொழிற்சாலை மற்றும் கட்டுமான தேவைகளுக்கு, கோவை மாநகராட்சி சார்பில், மும்முறை சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதுபோன்று நீர் விநியோகம் செய்யும் சேவைகளில் ஈடுபடுபவர்கள், தங்கள் விவரங்களை cityengineer.coimbatore@gmail.com என்ற இமெயில் முகவரி மூலமாகவோ, அல்லது 9944064948 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அனுப்பலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 31, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 31) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News March 31, 2025
மருதமலை சிறப்பு தெரியுமா?

கோவையின் அடையாளமாக திகழும் மருதமலை முருகன் கோயில், முதலில் கொங்கு சோளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தலம் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதைய்யன் என்ற பெயர்களில், 9ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இக்கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்தாராம். தீமைகளை போக்கும் சர்வ வள்ளமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.
News March 31, 2025
கோவையில் 7 பேருக்கு தொழுநோய் சிகிச்சை துவக்கம்

கோவையில் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சூலூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 7 பேருக்கு தொழுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் 223 குழுக்கள் மூலம் 4.95 லட்சம் பேருக்கு ஆய்வு நடத்தப்பட்டது. இதுவரை 100 நாட்களாக ஆய்வு பணிகள் நடைபெற்றுள்ளன.