News March 26, 2025
விலையை உயர்த்தக்கூடாது: அமைச்சர் எச்சரிக்கை!

ஜல்லி, எம்சாண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக கூறினார். தன்னிச்சையாக விலையை உயர்த்தினால் சம்பந்தப்பட்ட கிரஷர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
Similar News
News April 1, 2025
விண்வெளியில் இருப்பது எப்பவும் பிடிக்கும்: சுனிதா

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி 12 நாள்கள் கழித்து சுனிதா, பட்ச் வில்மோர், நிக் ஹேக் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுனிதா பேசும்போது, விண்வெளியில் நேரத்தை செலவிடுவது தனக்கு எப்போதும் பிடிக்கும் எனவும், அங்கு நிறைய ஆராய்ச்சிகளை செய்ததாகவும் கூறினார். மேலும், தங்களை விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமிக்கு கொண்டுவந்த டிரம்ப், மஸ்கிற்கு நன்றியுள்ளவராக இருப்பேன் எனவும் தெரிவித்தார்.
News April 1, 2025
அண்ணா பொன்மொழிகள்

*எதிரிகள் தாக்கித்தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித்தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள். *பிறருக்குத் தேவைப்படும்போது நல்லவர்களாகத் தெரியும் நாம்தான், அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம். *புகழைத் தேடி நாம் செல்லக்கூடாது, அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும். *உலகின் பிளவு, குடும்பத்தில் தொடங்குகிறது. *ஊக்கத்தை கைவிடாதே, அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.
News April 1, 2025
சென்னை கார் ஆலையை கைப்பற்றிய ரெனால்ட்

பிரான்ஸின் ரெனால்ட், ஜப்பானின் நிசானுடன் இணைந்து சென்னை ஒரகடத்தில், ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா என்ற கார் உற்பத்தி ஆலையை தொடங்கின. இதில் நிசான் நிறுவனத்திற்கு சொந்தமான 51% பங்குகளை ரெனால்ட் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், அந்த ஆலை ரெனால்ட்டுக்குச் சொந்தமானதாக மாற உள்ளது. இருப்பினும், புதிய நிசான் கார் மாடல்களை இந்த ஆலை தொடர்ந்து உற்பத்தி செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.