News March 26, 2025

திருப்பணியில் ஊழலா? பக்தர்கள் அதிர்ச்சி!

image

திருச்செந்தூரில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிவறை தரமற்றதாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. கோயில் பணியில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலையும் சாடியிருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் ராமநாத ஆதித்தன் என்பவர் RTI மூலம் பெற்ற தகவலில் ₹300 கோடி செலவில் நடக்கும் கோயில் திருப்பணிக்கு, வரைபடம் தயாரிக்க மட்டும் Pvt நிறுவனத்திற்கு ₹8 கோடி வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த தகவலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News September 18, 2025

யார் இந்த மருது அழகுராஜ்?

image

1998-ல் அதிமுகவில் இணைந்து 2004 வரை பயணித்தார். பின்னர் தேமுதிகவில் இணைந்த அவர், 2009-ல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். ‘நமது எம்ஜிஆர்’ என்ற அதிமுக நாளிதழ், EPS-OPS ஆல் உருவாக்கப்பட்ட ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தார். பின்னர், OPS-ன் தீவிர ஆதரவாளராக மாறினார். ஜெ.,வின் பல அரசியல் உரைகளையும் எழுதியுள்ளார். திருப்பத்தூரில் தேமுதிக (2006), அதிமுக (2021) சார்பில் போட்டியிட்டிருந்தார்.

News September 18, 2025

பிரான்ஸில் போராட்டம்: குவியும் 8 லட்சம் பேர்

image

பிரான்ஸில் ஆசிரியர்கள், ரயில் டிரைவர்கள், மருந்தாளுநர்கள், ஹாஸ்பிடல் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்ட போராட்டத்தில் தற்போது மாணவர்களும் இணைந்துள்ளனர். சிக்கன நடவடிக்கையை நிறுத்தி நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும், பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று கோரி நடக்கும் போராட்டத்தில் 8 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தை தடுக்க 80,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News September 18, 2025

₹3.5 கோடி கடனில் இருக்கிறேன்: அண்ணாமலை

image

தனக்கு ₹3.5 கோடி கடன் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொந்தமாக சம்பாதித்து விவசாய நிலம் வாங்கினால் கூட விளக்கம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், நிலத்தின் சந்தை மதிப்பை விட அதிக விலைக்கே வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலம் வாங்கிய விஷயத்தில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அண்ணாமலை, வேண்டுமென்றால் திமுக அரசு DVAC அனுப்பி சோதனை நடத்தட்டும் என்று சவால் விடுத்தார்.

error: Content is protected !!