News March 26, 2025
முன்னாள் MLA மறைவு: ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் MLA கருப்பசாமி பாண்டியன் மறைவையொட்டி, ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 1977இல் ஆலங்குளம், 1980இல் பாளையங்கோட்டை, 2006இல் தென்காசி தொகுதியில் இருந்து MLA-ஆக தேர்வாகி மக்களுக்காக உழைத்தவர். நீண்டகாலம் சட்டப்பேரவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
Similar News
News April 1, 2025
பாலியல் வக்கிர கணவனை மாட்டிவிட்ட மனைவி

நாக்பூரில் பல பெண்களிடம் தவறாக நடந்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கணவனை, அவரது மனைவி போலீஸில் போட்டுக் கொடுத்துள்ளார். கணவனின் நடத்தையில் சந்தேகம் வரவே, அவரது வாட்ஸ்அப்பை ஹேக் செய்த போது மனைவிக்கு இது தெரியவந்துள்ளது. மேலும், தனது கணவனால் பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணையும் புகாரளிக்க வைத்துள்ளார். ஆபாசப் படங்களில் வருவது போல் செயல்பட சொல்லி தன்னையும் வற்புறுத்தியதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
News April 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 223 ▶குறள்: இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. ▶பொருள்: ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.
News April 1, 2025
ரோஹித் இடத்தில் மற்ற வீரர்கள் இருந்தால்?

ரோஹித் ஷர்மா என்ற பெயர் மட்டும் இல்லை என்றால், அவர் MI-யில் இருந்து கழட்டிவிடப்பட்டிருப்பார் என முன்னாள் ENG கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ஷர்மா தற்போது கேப்டன் இல்லாததால், அதிக ரன்கள் அடிக்க வேண்டியது அவரது கடமை எனவும், இதுவே மற்ற வீரர்கள் என்றால் அவர்களுக்கு அணியில் இடம் கிடைத்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல்லில் 3 போட்டிகளில் 21 ரன்களை மட்டுமே ரோஹித் எடுத்துள்ளார்.