News March 26, 2025
திருப்பூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

திருப்பூரில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News April 7, 2025
கலெக்டர் அலுவலகத்தில் 673 மனுக்கள் குவிந்தது

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 673 மனுக்களை அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை பரிந்துரை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
News April 7, 2025
திருப்பூர் மாவட்ட அங்கன்வாடியில் வேலை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)
News April 6, 2025
ரேசன் கார்டு தாரர்களுக்கு சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய, குழந்தைகளின் பெயரை சேர்க்க அல்லது உறுப்பினர்கள் பெயரை நீக்க, ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான குறைகள் சரி செய்ய, மண்டலம் விட்டு மண்டலம் மாறப்போகிறவர்கள் என அனைத்து ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்கும் உடனடி தீர்வாக வரும் ஏப்ரல் 12ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.