News March 26, 2025
இல்லவே இல்லை; டென்ஷனான இபிஎஸ்!

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இபிஎஸ் சற்று பதற்றமானார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் ஊடகங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக, இப்படி கேட்பதா? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி மாறும் எனவும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கமளித்தார்.
Similar News
News December 9, 2025
குக் வித் கோமாளி பிரபலத்தை மணக்கிறாரா பிக்பாஸ் ஜூலி?

ஜூலிக்கு கடந்த வாரம் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது தொடர்பான போட்டோக்களை அவர் வெளியிட, எதிலுமே மாப்பிள்ளையின் முகம் இல்லை. எனவே, யார் அவர் என அனைவரும் தேடத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அவர் பெயர் முகமது இக்ரீம் எனவும், குக் வித் கோமாளி, ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சிகளில் ஷோ ஏற்பாட்டாளராக பணியாற்றி இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி Official தகவல் வரவில்லை.
News December 9, 2025
விஜய் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்

புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோரை போலீசார் சோதனை செய்தபோது, துப்பாக்கியுடன் வந்த நபர் பிடிபட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக கரூர் துயர சம்பவத்தின்போது ‘Y’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
News December 9, 2025
விஜய் புறப்பட்டார்..

புதுச்சேரியில் நடக்கவுள்ள தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டார். உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கவுள்ள இக்கூட்டம் 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் பங்கேற்க 5 ஆயிரம் பேருக்கு QR code உடன் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்தை அடுத்து 73 நாள்களுக்கு பிறகு இன்று தனது பரப்புரை வாகனத்தில் நின்று விஜய் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


