News March 26, 2025

ஷூட்டிங்கில் காதல்.. மனோஜின் மனைவி யார் தெரியுமா?

image

மறைந்த நடிகர் மனோஜ் ‘சாதுரியன்’ படத்தில் நடித்தபோது உடன் நடித்த கேரள நடிகையான நந்தனாவுடன் காதலில் விழுந்தார். நந்தனா தமிழில் ABCD, சக்சஸ், சாதுரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனோஜின் பிரிவால் அவரது மனைவி, மகள்கள் கண்ணீர் சிந்தும் காட்சி காண்போரையும் கண்கலங்க வைக்கிறது.

Similar News

News January 12, 2026

மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை மாவட்டத்தில், அதிகபட்சமாக சீர்காழியில் 10.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடியில் 9 மிமீ, செம்பனார்கோவிலில் 8 மிமீ, மணல்மேட்டில் 5 மிமீ, கொள்ளிடத்தில் 6.80 மிமீ, மயிலாடுதுறையில் 1 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

FLASH: தொடர் சரிவால் தடுமாறும் இந்திய சந்தைகள்!

image

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 715 புள்ளிகள் சரிந்து 82,861 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 210 புள்ளிகள் சரிந்து 25,473 புள்ளிகளாகவும் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தமுள்ள 4,252 நிறுவனங்களில் 3,189 நிறுவன பங்குகள் இச்சரிவை சந்தித்ததால், ₹6 லட்சம் கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாண்டு அன்று 85,451-ஆக இருந்த சென்செக்ஸ் தற்போது 2,600 புள்ளிகள் சரிந்துள்ளது.

News January 12, 2026

இவர் தூய்மை பணியாளர் மட்டுமில்ல.. தூய்மையானவர்!

image

மனித மனம் எப்போதும் தடுமாறக்கூடியதே. ஆனால், சென்னையை சேர்ந்த பத்மா, தன் வேலையை போலவே மனதளவிலும் தூய்மையானவராகவே உள்ளார். சென்னை தி.நகரில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன. உடனே, அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சுமார் ₹48 லட்சம் மதிப்பிலான நகைகளை தவறவிட்ட ரமேஷ் என்பவரிடம் நகை ஒப்படைக்கப்பட, பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. Salute மேடம்!

error: Content is protected !!