News March 26, 2025

அமித் ஷாவிடம் கூட்டணி பற்றி பேசவில்லை: இபிஎஸ்

image

தமிழக மக்களின் பிரச்னைக்காகவே அமித் ஷாவை சந்தித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருமொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு, டாஸ்மாக் முறைகேடு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தே அமித் ஷாவிடம் பேசியதாக கூறினார். 45 நிமிடங்களும் தமிழகத்தில் கிடப்பில் இருக்கும் திட்டங்கள் குறித்தே விளக்கமாக எடுத்துரைத்ததாக கூறினார்.

Similar News

News February 20, 2026

ஒரே மேடையேறும் திமுக கூட்டணித் தலைவர்கள்

image

மதுரையில் நாளை கமல் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் நேற்று இணைந்தது. இதனையடுத்து திமுக கூட்டணி வலுவாக இருப்பதை காட்ட வேண்டும் என்பதற்காக, மு.க.ஸ்டாலின், பிரேமலதா, திருமா, செல்வப்பெருந்தகை, வைகோ, பெ.சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் நாளை ஒரே மேடையில் ஏறவுள்ளனர்.

News February 20, 2026

இளம் நடிகை லீலா காலமானார்.. கணவர் கண்ணீர்

image

நுரையீரல் பிரச்னையால் <<19166313>>சீரியல் நடிகை ரஷ்மி லீலா(37)<<>> அண்மையில் காலமானார். அவரது மறைவு குறித்து கணவர் சரிக்கு மஞ்சு, SM-ல் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், விரைவில் லீலா குணமடைவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தது பெரும் வேதனை. லீலாவின் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

News February 20, 2026

இந்தியா, US வர்த்தக ஒப்பந்தம்.. புதிய தகவல்

image

இந்தியா – US இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் கையெழுத்தாகும் என்றும், ஏப்ரலில் அமலுக்கு வரும் எனவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருநாட்டு உயரதிகாரிகளும், வாஷிங்டனில் பிப் 23 முதல் 25-ம் தேதி வரை பேச்சுவார்த்தை நடத்தி முதல்கட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்றார். மேலும், UK & ஓமன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும் ஏப்ரலில் அமலுக்கு வரும் எனக் கூறினார்.

error: Content is protected !!