News March 26, 2025
கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News December 1, 2025
கரூர்: TNPSC இலவச பயிற்சி வகுப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

கரூர் வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (01.12.2025) தொடங்கின. டிசம்பர் 2025 முதல் மே 2026 வரை நடைபெறும் ஆறு மாத பயிற்சி, TNPSC Group I, II, IIA, IV தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள முன்பதிவு forms.gle/p4rp29kbe8PXqvet9 மூலம் செய்யலாம். மேலும் இந்த எண்ணை 63830-50010 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
News December 1, 2025
கடவூர் பகுதியில் பைக்கில் தடுமாறி விழுந்தவர் பலி!

கடவூர், தென்னிலை அடுத்த கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் நேற்று தனது பைக்கில் திருமலைபாளையம் சாலையில் சென்றபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 1, 2025
கரூர்: வழக்கறிஞர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கரூர் தாந்தோணி மலை இந்திராகாந்தி நகரை சேர்ந்த வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன் (56), முத்துலாடம் பட்டி சாலையில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத ராயல் என்ஃபீல்டு புல்லட் மோதி நிற்காமல் தப்பியது. இதில் அவர் தலை மற்றும் கழுத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். தாந்தோணி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


