News March 26, 2025
சேலம்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா? என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News August 21, 2025
சேலம்: வாலிபர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு குண்டாஸ்!

கடந்த ஜூலை 15- ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த மதன்குமார் (25) என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கிராஜா (35), விக்னேஷ் (20), பிரவீன்ஷா (22), கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), முத்து ரிஷிகபூர் (28) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News August 21, 2025
மேட்டூர் அணையின் 92-வது பிறந்தநாள் இன்று

தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று (ஆக.21) 92-வது பிறந்தநாள். தமிழகத்தின் மிகப்பெரிய அணை நமது மேட்டூர் அணை. அணையை கட்ட சுமார் 9 ஆண்டுகள் ஆனது. கடந்த 1934-ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. அணைக்கட்டும் பணியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
News August 21, 2025
சேலத்தில் வாலிபர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு குண்டாஸ்