News April 2, 2024
லாரி மோதி மின் கம்பம் உடைந்தது

ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே மின்கம்பம் உள்ளது நேற்று இரவு அவ்வழியே வந்த லாரி மின்கம்பத்தின் மீது மோதியதில் பலத்த சேதம் அடைந்த மின்கம்பம் உடைந்தது. இதனால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்விநியோகம் பாதித்தது.
Similar News
News August 15, 2025
திருவள்ளூர்: இலவச AI பயிற்சி, ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்!

திருவள்ளூர் மக்களே, AI துறையில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, அல்லது டிகிரி முடித்தவர்கள் <
News August 15, 2025
திருவள்ளூர் எம்பி சுதந்திர தின வாழ்த்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அவர் தனது வாழ்த்துச் செய்தியில், சுதந்திரத்தின் உண்மையான தத்துவங்களான சமத்துவம், சகோதரத்துவம், நேர்மை ஆகியவற்றை கடைப்பிடித்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என வலியுறுத்தியுள்ளார்.
News August 15, 2025
தேசியக்கொடி ஏற்றிய ஆட்சியர் பிரதாப்!

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில், ஆட்சியர் பிரதாப் தேசியக்கொடி ஏற்றினார். எஸ்.பி. விவேகானந்த சுக்லாவுடன் இணைந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூவர்ண பலூன்கள், சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.