News March 26, 2025

நாகை: 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

image

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) டெக்னீசியன் பிரிவில் 17 காலியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 18-28 வயதுடைய பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் cbri.res.in என்ற இனையம் மூலம் 15.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், இதனை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

Similar News

News December 19, 2025

நாகை: மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000

image

நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர் வழியாக NMMS திறனறிவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் என 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.20 கடைசி நாளாகும். எனவே இதனை மாணவ மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பசு, எருமை வெள்ளாடு போன்ற கால்நடைகளை எளிதில் தாக்கக் கூடிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் 29/12/2025 முதல் 28/01/2026 வரை கிராமங்கள் தோறும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

நாகையில் வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

image

நாகை மாவட்ட போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட 43 வாகனங்கள் மற்றும் ஒரு படகு ஆகியவை வரும் டிச.23-ந்தேதி, காலை 10 மணிக்கு நாகை ஆயுத படை மைதானத்தில் எஸ்.பி முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அட்டையுடன் நேரில் பங்கேற்று ஏலம் கேட்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!