News March 26, 2025
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றம்?

கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநிலத் தலைவர்கள் மாற்றப்பட்ட நிலையில், பாஜக தலைமை அண்ணாமலையை மட்டும் மாற்றவில்லை. எப்போது வேண்டுமானாலும், புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் என செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், அமித்ஷா உடனான சந்திப்பில் அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி என்று இபிஎஸ் கெடுபிடி காட்டியதாகவும், அதற்கு அமித்ஷா சம்மதம் தெரிவித்ததாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 18, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 17.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 18, 2026
TN காங்கிரஸ் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 17, 2026
ஹாஸ்பிடலில் துரைமுருகன்.. நலம் விசாரித்த CM ஸ்டாலின்

அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக ஹாஸ்பிடல் விரைந்த CM ஸ்டாலின், துரைமுருகனின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். மேலும், உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்கவும் டாக்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், அவரது உடல்நலம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


