News April 2, 2024

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வடக்கு கடற்கரைப் பகுதிகளில் மட்டும் நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதங்கள் குறித்த விவரமும் வெளிவரவில்லை.

Similar News

News November 9, 2025

விஜய் மனிதாபிமானம் உள்ளவரா? துரைமுருகன்

image

உச்சபட்ச அதிகார மயக்கத்தில் மனிதாபிமானம் இல்லாமல், சட்டசபையில் CM ஸ்டாலின் பேசியதாக விஜய் விமர்சித்ததற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு செல்லாத விஜய் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 9, 2025

உங்கள் அக்கவுண்ட்டில் இத முதல்ல மாத்துங்க

image

சுமார் 2 பில்லியன் கணக்குகள் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஈஸியான பாஸ்வேர்டுகளை வைத்துள்ளதாக Comparitech நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ‘123456’ என்ற பாஸ்வேர்டை 76 லட்சம் பேரும், ‘admin’ என 19 லட்சம் பேரும் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல அந்த லிஸ்ட்டில், ‘qwerty’, ‘password’, ‘India@123’ போன்ற பாஸ்வேர்டுகளும் இடம்பெற்றுள்ளன. இதை இன்றே மாற்றும்படி அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

image

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, நவ.15-க்குள் வங்கி கணக்கில் ₹2,000 செலுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் பணம் கிடைக்க, <>pmkisan.gov.in<<>> இணையதளத்தில் விவசாயிகள் தங்களது PM KISAN திட்ட கணக்கு, வங்கி கணக்கு ஆகியவற்றை அப்டேட் செய்வது அவசியம். SHARE IT

error: Content is protected !!