News March 26, 2025

குறைதீர் கூட்டத்தில் 736 மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News March 31, 2025

குடும்பத்தை ஒற்றுமையாக்கும் திருத்தலம்

image

திருவள்ளூர், திருவாலங்காடில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வர்ர கோயில். முற்க்காலத்தில் இறைவன் சுயம்வுவாக தோன்றி நடனம் ஆடிய தலம் என்பதால் வடாரண்யேஸ்வரர் என பெயர் பெற்றது. இத்தலம் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. மேலும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் பண்ணுங்க<<>>

News March 31, 2025

தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

image

திருவள்ளூர், திருவேர்க்காட்டில் வீடு புகுந்து மொபைல், மடிக்கணிகள் திருடப்பட்டுன. இதுகுறித்து காவல்துறைக்கு வந்த புகாரின் பெயரில் மர்ம நபர்களை தேடிய நிலையில் இன்று ராமச்சந்திரன், ஜனார்த்தனம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த பொழுது அவர்களிடம் இருந்து 26 மொபைல் போன் மற்றும் 3 மடிக்கணிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவர் மீதும் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!