News March 26, 2025

பங்குனி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நிரல்

image

அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஏப்.8 அன்று பங்குனி பொங்கல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்.15 பொங்கல் விழாவும், ஏப்.16 அக்னி சட்டி, பூக்குழி விழாவும், ஏப்.17 திருத்தேர் மற்றும் ஏப்.18  பூ பல்லாக்கு நிகழ்வும் நடைபெற உள்ளது.

Similar News

News August 12, 2025

விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

image

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2550 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.165 விலை உயர்ந்து ரூ.5940 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.10 விலை உயர்ந்து ரூ.1900, ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7000 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News August 11, 2025

சாத்தூரில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

image

விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் 2 நாட்களுக்கு முன் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை வெற்றிலையூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் வீடு வீடாக நடத்திய அதிரடி சோதனையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News August 11, 2025

திருத்தங்கல் அரசு பள்ளியில் மோதல்

image

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பறையில் வைத்து தாக்கிக்கொண்ட சம்பவம் சகமானவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இரு மாணவர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பிய வைத்தனர். இதே பள்ளியில் கடந்த மாதம் போதையில் மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!