News March 26, 2025
29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
Similar News
News April 2, 2025
மனைவிக்கு திருமணம் செய்த கணவர்.. புது ட்விஸ்ட்

உ.பி.யை சேர்ந்த <<15896779>>பப்லு,<<>> தனது மனைவி ராதிகாவுக்கும், அவரது காதலர் விகாஸுக்கும் தொடர்பிருப்பதை அறிந்து திருமணம் செய்து வைத்தது தெரியும். இதில் பப்லுவின் தாயார் தலையிட்டு, 2 குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி, அவர்கள் நலனுக்காக ராதிகாவை திரும்ப வரும்படி கூற, ராதிகாவும் விகாசை விட்டுவிட்டு திரும்பி விட்டார். அவரை திரும்ப ஏற்ற பப்லு, ராதிகா அப்பாவி எனத் தெரிவித்துள்ளார். நீங்க என்ன சொல்றீங்க?
News April 1, 2025
இவர் யார் தெரியுதா?

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் AI-ஐ பயன்படுத்தி ‘ஜிப்லி’ கதாபாத்திரங்களாகவே தங்கள் புகைப்படத்தை மாற்றி டிரெண்ட் செய்து வருகிறார்கள். CM ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆகியோரின் புகைப்படங்களும் இதேபோல் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இதையடுத்து இன்னொரு அரசியல் பிரபலமும், தனது படத்தை (மேலே) வெளியிட அதுவும் ட்ரெண்டாகி வருகிறது. அவர் யார்னு தெரிஞ்சா, கீழே பதிவிடுங்க.
News April 1, 2025
மாதம் ரூ.5000… அப்ளை பண்ணுங்க

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடுவை, மத்திய அரசு ஏப்.15 வரை நீட்டித்துள்ளது. 12th, Diploma, ITI, Degree படித்த, வேலையில்லாத 21-24 வயதினர் இதில் இணையலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதன் மூலம் டாப்-500 நிறுவனங்களில் மாதம் ₹5,000 உதவித் தொகையுடன், ஓராண்டு internship பெறலாம். மேலும், ஒருமுறை ₹6,000 கிடைக்கும். இணைய: https://pminternshipscheme.com/