News March 26, 2025
விடுமுறையில் மாணவர்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர்சித்திக் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோடை காலம் தொடங்கி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கோடை விடுமுறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகே உள்ள குளம் குட்டை ஆறுகள் ஏரி, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்லாதவாறு பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 17, 2025
முன்னேற்றமில்லாத ராணிப்பேட்டை- நயினார் சாடல்!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “மெட்ராஸ் மாகாணத்தில் மிகப்பழமையான நகராட்சி ராணிப்பேட்டை. கல்வி, மருத்துவம் என எதிலுமே முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சுவர் இடிந்து விழுந்து இறந்து போனது இந்த மாவட்டத்தில் தான். திருவள்ளூரிலும் இதே போல ஒரு மாணவர் இறந்துள்ளது வருத்தமளிக்குறது” என்றார்.
News December 17, 2025
ராணிப்பேட்டை: பால் வாங்க சென்ற மூதாட்டி பலி!

பாத்திரக்காரன்பட்டியை சேர்ந்த மூதாட்டி சுகுணா (70) நேற்று (டிச.16) வீட்டின் அருகில் உள்ள சாலையில் பால் வாங்குவர்தற்காக நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த தனியார் வேன் ஒன்று மூதாட்டியின் மீது மோதியது. காயமடைந்த மூதாட்டியை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திமிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 17, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல், இன்று (டிச-16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்னுங்க!


