News March 26, 2025

நீட் தேர்வு: அடுத்தடுத்து 2 பேர் தற்கொலை!

image

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பீஹார் மாணவர் ஹர்ஷ்ராஜ் தற்கொலை செய்து கொண்டார். கோட்டாவில் தங்கியிருந்த ஓட்டலில் அவரது உடல் மீட்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குள் ஜோத்பூரில் மற்றொரு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். ராஜஸ்தானில், இந்த ஆண்டு மட்டும் தேர்வு அழுத்தத்தால் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த எண்ணம் எழுந்தால், 104 என்ற எண்ணை அழைக்கவும்!

Similar News

News April 1, 2025

காற்று மாசால் மாரடைப்பு வரும்

image

காற்று மாசுபாட்டால் மாரடைப்பு வரும் ஆபத்து உள்ளதாக சீனாவின் ஃபூடான் பல்கலை., ஆய்வில் தெரிய வந்துள்ளது. காற்றுமாசை ஏற்படுத்தும் துகள்களை சுவாசிக்க நேரிட்டால், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே மாரடைப்பு ஏற்படலாம். அந்த அளவுக்கு காற்றுமாசு ஆபத்தானது என்கிறது WHO அறிக்கை. காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நுண்ணிய துகள்கள் தான் இதற்கு காரணமாம்.

News April 1, 2025

ஹேப்பியா இருக்கணுமா? 10 நிமிடம் ஓடுங்க!

image

தினமும் 10 நிமிடம் ஓடுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். ஓடுவதால் பெருமூளை தமனியில் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து, மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதனால் மூலையில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன், மூளையின் முன்புரணியை தூண்டுவதன் மூலமாக மூளை சிறப்பாக செயல்பட்டு மகிழ்ச்சி ஏற்படும் என்றும் அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓடத் தயாரா?

News April 1, 2025

ராசி பலன்கள் (01.04.2025)

image

➤மேஷம் – ஓய்வு ➤ரிஷபம் – நட்பு ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – சிரமம் ➤சிம்மம் – சினம் ➤கன்னி – ஆதாயம் ➤துலாம் – கவனம் ➤விருச்சிகம் – பாசம் ➤தனுசு – பகை ➤மகரம் – உதவி ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – நிறைவு.

error: Content is protected !!