News April 2, 2024

காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

image

ஆற்காடு பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதரவாக உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை விளக்கி அதன் கூட்டணியை சார்ந்த திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Similar News

News August 15, 2025

நெமிலி: மின்கம்பி உரசி டிரைவர் பலி

image

நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தை சேர்ந்த சரவணன்(35) அறுவடை இயந்திர டிரைவர். இந்நிலையில், நேற்று இவர் காவேரிப்பாக்கம் அருகே கொண்டராபுரம் விவசாய நிலத்தில் அறுவடை செய்ய சென்றபோது எதிர்பாராத விதமாக மின்கம்பி உரசி பலத்த காயமடைந்தார். இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 15, 2025

ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம்

image

வேலூர் மின் பகிர்மான வட்டம் ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த மாதத்துக்கான கூட்டம் 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்க உள்ளது. கூட்டத்தில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன் பெறலாம்

News August 15, 2025

ராணிப்பேட்டை: இலவச AI பயிற்சி, ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்!

image

ராணிப்பேட்டை மக்களே, AI துறையில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, அல்லது டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் போன்ற பணிகளுக்கு, ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை சம்பளத்துடன் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!