News March 26, 2025

இராமநாதபுரம் ஊராட்சிகளில் குறையா? – புகார் தெரிவிக்கலாம்

image

இராமநாதபுரம், போகலுார் – 74029 07610, கடலாடி – 74029 07614, கமுதி – 74029 07613, மண்டபம் – 74029 07606, முதுகுளத்துார் – 74029 07612, நயினார்கோவில் – 74029 07611, பரமக்குடி – 74029 07609, ஆர்.எஸ்.மங்கலம் – 74029 07607, ராமநாதபுரம் – 74029 07604, திருப்புல்லாணி – 74029 07605, திருவாடாணை – 7402907608 எண்களுக்கு வாட்ஸ்ஆப் & 18004257040 எண்ணில் அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். *ஷேர்

Similar News

News September 17, 2025

சாயல்குடி, பெருநாழி பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

image

சாயல்குடி துணை மின் நிலையம், பெருநாழி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (செப். 17) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 33 கே.வி. மின் பாதையில் பாலிமர் இன்சுலேட்டர் மாற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

News September 17, 2025

இராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News September 16, 2025

முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் செப். 23ம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள், தங்கள் மனுக்களை இரட்டைப் பிரதிகளுடன் சமர்ப்பித்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

error: Content is protected !!