News March 26, 2025
அதிமுக மூத்தத் தலைவர் காலமானார்

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கருப்புசாமி பாண்டியன் (76) உடல்நலக்குறைவால் காலமானார். MGR காலம் தொட்டு அ.தி.மு.கவில் பணியாற்றிய இவர் ‘கானா’ கருப்பசாமி பாண்டியன் என அழைக்கப்பட்டார். அதிமுகவில் நெல்லை மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய இவர், அதிமுகவிலிருந்து விலகி 2006 – 2011 தென்காசி தொகுதியில் திமுக MLAஆக இருந்தார். பின்னர், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
Similar News
News March 29, 2025
அன்று வங்கதேசம்; இன்று நேபாளம்?

நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக நடந்துவரும் வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 100-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்றவில்லை என்பதால் மீண்டும் மன்னராட்சி வேண்டுமென்று எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் வங்கதேசத்தில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருந்தன. இதிலும் அப்படி இருக்குமோ?
News March 29, 2025
குஜராத் அணி முதலில் பேட்டிங்…!

ஹர்திக் பாண்டியா தலைமையிலான MI அணியும், கில் தலைமையிலான GT அணியும் அகமதாபாத் மைதானத்தில் சற்றுநேரத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இதனால், இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும். இதுவரை 5 போட்டிகளில் நேருக்குநேர் மோதி, GT 3 முறையும் MI 2 முறையும் வென்றுள்ளன. இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
News March 29, 2025
தமன்னாவுக்கு பிரேக்கப்? காதலனின் சுவாரஸ்ய பதில்

தமன்னாவுக்கும் அவரது காதலன் விஜய் வர்மாவுக்கும் பிரேக்கப் ஆனதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் ரிலேஷன்ஷிப் குறித்து சுவாரஸ்யமான பதிலை வர்மா அளித்துள்ளார். ஐஸ்கிரீமை சுவைப்பது போல் ரிலேஷன்ஷிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் சில நேரம் இனிக்கும், சில சமயம் உப்பாக இருக்கும் என கூறியுள்ளார். எதுவானாலும் அனுபவித்து கடந்து செல்ல வேண்டும் என வர்மா கூறியுள்ளார்.