News March 26, 2025
புதுவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் இன்று புதுச்சேரி வேலைவாய்ப்பகம் வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் & புதுவையைச் சார்ந்த 10 நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேல் பணியிடங்களை நிரப்ப உள்ளன. SSLC, HSC, ITI, DIPLOMA, ANY Degree என அனைவரும் பங்கு பெறலாம். நண்பர்கள் பயன் பெற SHARE செய்யவும்..
Similar News
News January 13, 2026
புதுச்சேரி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
புதுச்சேரி: 2000ஆம் ஆண்டு பழமையான கோயில்!

காரைக்காலில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்குள்ள மூலவர் கைலாசநாதர், தாயார் செளந்தாராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டு மீண்டும் பிரெஞ்ச் ஆட்சி காலத்திலும் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யவும்.!
News January 12, 2026
BREAKING புதுச்சேரி: ரூ.3000 பொங்கல் பரிசு அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்க முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த தொகை பொங்கலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ பயனாளிகளின் வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். மேலும் இதற்கான கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளதால், ஒப்புதல் கிடைத்தவுடன் முழுத் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.


