News March 26, 2025

துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் – டிஎஸ்பி மிரட்டல்

image

உசிலம்பட்டி வக்கீல்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் கனி ராஜன் கடந்த 8-ந்தேதி பெண் ஒருவரின் காரை அபகரித்துக் கொண்டவர்கள் மீது புகார் அளிப்பதற்காக அந்த பெண்ணுடன் சென்றார். அப்போது தரக்குறைவாக பேசி சுட்டுவிடுவேன் என உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மிரட்டியுள்ளார். புகார் அளிக்க சென்றவர்களை சுட்டு விடுவேன் என மிரட்டிய சம்பவத்தில் காவலர் விரிவாக பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.

Similar News

News April 7, 2025

மதுரையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரியார் சிலை முன்பாக இன்று ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதி திராவிட துறையின் முறைகேடுகளை கண்டித்தும், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

News April 7, 2025

மதுரையில் ரூ,25,000 சம்பளத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 க்கும் மேற்பட்ட கடன் மீட்பு முகவர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். 18 வயது முதல்40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் <<>>செய்து இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

News April 7, 2025

மதுரையில் தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் அபராதம்

image

மதுரை மாவட்டத்தில் ”வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க தவறினால் மே 1 முதல் அபராதம் விதிக்கப்படும்” என தொழிலாளர்துறை எச்சரித்துள்ளது. மேலும் இவ்விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 1லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம் என்பதால் விதியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!