News March 26, 2025

வெயிலின் கொடுமையால் இறந்த முதியவர் 

image

காரைக்குடி, வள்ளலார் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(60). வீட்டை விட்டு கிளம்பி வேலைக்கு சென்றவர் தேவகோட்டையில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்தார் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. (கோடையில் மதியம் 12 – 3 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்க்கவும்)

Similar News

News November 6, 2025

சிவகங்கை: அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஒப்பனை அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses) பயிற்சிகள் பெறுவதற்கு, தகுதியின் அடிப்படையில் www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

சிவகங்கை: மீன் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு மீன்வள ஆய்வாளர் தொடர்பு எண் 9384824553 என்ற அலைபேசி எண்ணிலும், மீன்வள மேற்பார்வையாளர் தரம் II 9790656919 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

சிவகங்கை: மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற நவ. 15 வரை நீட்டிப்பு; மேலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்த்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புவதற்கான கால அவகாசம் வருகிற நவ.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என‌ கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார். மேலும் அறிய <>க்ளிக் <<>>செய்யுங்க.

error: Content is protected !!